பசுமை
இயற்கையின் பிள்ளைகளாய் அவள் மடியில் தவழ வேண்டிய நாம், ஆற்று
மணலை அள்ளி அவள் ஆடை கலைகின்றோம்!
குளிர்சாதன பெட்டிகளால் அவளை சூடாக்குகின்றோம்!
தொழிற்சாலை கழிவுகளால் அவள் தோல் உரிக்கின்றோம்!
மரங்களை வெட்டி அவள் மார்பை பிளக்கின்றோம்!
நெகிழிகளை உணவாக்கி அவளுக்கு விஷம் கொடுக்கின்றோம்.
இயற்கையின் பகையாளியான நாம் அவள் பாசமழையில் நனைவது எப்போது?
சிந்திப்போம்…!
பசுமையைப் பள்ளிப்பருவப் பிள்ளைகளுக்கு பாடமாக்குவோம்!
பிறந்த நாட்களில் மரக்கன்றுகளை பரிசளிப்போம்!
உணவிடும் விவசாயிகளின் உணர்வுகளை மதிப்போம்!
விவசாயத்தை அரசாங்க தொழிலாக்குவோம்!
பழைமையைப் போற்றும் பாசன முறையை பின்பற்றுவோம்!
ஒவ்வொரு ஜனனத்திலும் ஒரு மரக்கன்று நடுவோம்!
இயற்கைக்கு மதிப்பளிக்கும் கட்சிக்கு வாக்களிப்போம்!
வேதிக்கழிவை விடுத்து, வீட்டுக் கழிவை உரமாக்குவோம்!
இயற்கையை நேசிப்போம்!
பசுமைத்தாயின் பாசமிகு பிள்ளைகளாவோம்!
Ati Narayanaa N M
Parent of Avanthikka Varshini A S (Grade X B)
Mahatma K K Nagar School