சர்வதேச தியான தினம்

சர்வதேச தியான தினம் டிசம்பர் 21 அன்று  அனுசரிக்க வேண்டும் என்று  ஐநா பொது சபை  ஒப்புதல் அளித்துள்ளது. உலகமே ஒரு குடும்பம், வசுதைவ குடும்பம் என்பது இந்தியாவில் கோட்பாடு. உலக மக்களின் உடல் மற்றும் மனநலனில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது  இதை உணர்த்தும் வகையில் மன நலன் மற்றும் அமைதியை ஏற்படுத்தும் தியானத்தை சர்வதேச தியான தினமாக கொண்டாட தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  இந்த சர்வதேச தியான தினத்தை கொண்டாடுவதற்கு  நம் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதைத்தான் திருமூலர் தன் திருமந்திரத்தில்

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்.

உடம்பினுகுள்ளே உறுபொருள் கண்டேன்.

உடம்பிலே உத்தமன் கோவில் கொண்டான் என்று

 உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே.

என்று திருமூலர் நம் உடலை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று இந்த பாடலில் அறிவுறுத்துகிறார்.

ஆரோக்கியமான உடலை பெற்றவர்களே இறைவனின் வரத்தை பெற்றவர்கள் ஆவார். பல செல்வ வளங்கள் பெற்றிருந்தாலும்  ஆரோக்கியம் இல்லை என்று சொன்னால் அந்த மனிதனின் செல்வத்தால் பயன் யாது?  இயற்கையில் பழுத்த பழமே  சுவை உடையது ஆகும்  புகை போட்டு பழுத்த பழம் சற்று துவர்ப்பாகத்தான் இருக்கும்.  நாம் இயற்கையாகவே பெற்ற இந்த உடம்பில் குற்றம் குறைகள் இருந்தாலும், அல்லது ஏதாவது ஏற்பட்டாலும் முறையாக பயிற்சியின் மூலம் சீர் செய்ய இயலும் என்றால் அது மிகையாகாது.

அதற்குத் தேவை கற்று தேர்ச்சி பெற வேண்டும் என்ற தீராத ஆவலும் முயற்சியும்தான். இந்த முயற்சிதான் நம்மை தியான நிலைக்கு அழைத்துச் செல்லும். உங்களை தியான  நிலையை உயர்த்தும்  பயிற்சிகள் இதோ: ஆசனங்களுக்கு எல்லாம் தலைமை ஆசனம் சூரிய நமஸ்காரம். இவை தலை முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளும் துண்டப்பட்டு நம் உடம்பில் உள்ள பல நோய்களை சரி செய்ய உதவுகின்றது

இவை தவிர 

நுரையீரல் பிரச்சனைகளை சரி செய்ய வீரபத்ராசனம்,

சைனஸ் பிரச்சனைகளுக்கு தடாசனம், புஜங்காசனம்,  

நீரிழிவு நோய்களுக்கு திரிகோணாசனம் மற்றும் உஷ்ராசனம்,

முதுகு வலி பிரச்சனைகளை சரிசெய்யும் ஜானுசீராசனம் மற்றும் பச்சிமோத்தாசனம்,

முழங்கால் வலியை போக்கும் பட்டாம்பூச்சி ஆசனம் மற்றும் பூனை ஆசனம்,

பெண்களின் பிரச்சனைகளை தீர்க்கும் மகராசனம்,

உடல் பருமனைக்கு குறைக்கும் பரிவர்த்த உட்கட்டாசனம் மற்றும் சர்வாங்காசனம்,

ரத்த சோகையை சரி செய்யும் நாடி சோதனை பிராணாயாமம்,

தூக்கமின்மை பிரச்சனைகளுக்கு பதங்குஸ்தாசனம்,

இவ்வாறு பல்வேறு ஆசனங்கள் பல காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

சிலருக்கு ஆரோக்கியமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம் உடல் மனம் என்ன சொன்னாலும் கேட்காது. அவர்களுடைய உடலும் வேலை செய்யாது, மனமும் வேலை செய்யாது அந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய எளிமையான பயிற்சியே முத்திரைகள் ஆகும். நம் உடலிலே விரல்கள் செய்யும் விந்தைகள் ஏராளம். விரல்கள் பத்தும் மூலதனம் என்ற பழமொழிக்கேற்ப விரல்கள் செய்யும் முத்திரைகள் பல.

பிரபஞ்சத்தின் சப்தத்தை அதிர்வுகளை குறிக்கும் ஓங்கார முத்திரை,

 உடம்பின் தலைப்பகுதியில் அதிக ரத்தத்தை வரவழைத்து உடலையும் மனதையும் சுறுசுறுப்பாகும் யோகமுத்ரா,

புத்தியை கூர்மையாக்கும் புத்தி முத்திரை,

நம் படிப்பில் நல்ல மதிப்பெண் பெற சரஸ்வதி முத்திரை,

 நம் நெஞ்சம் மகிழ்ந்து மற்றவர்கள் மனதை மகிழ செய்யும் பங்கஜமுத்திரை,

நம் மனதின் கழிவுகள் சிந்தனை கழிவுகளை சேபனமுத்திரை ,

செல்வ வளத்தை கொடுக்கும் குபேர முத்திரை,

முதுகுத்தண்டை பலமாக்கும் Backbone Mudra,

கண் பார்வை அதிகரிக்கச் செய்யும் கருட முத்ரா,

தலைவலியை போக்கும் மகாசிரசு முத்திரை,

பஞ்ச பூதங்களை நம் வசமாக்கும் வாயு முத்திரை,

நம் மனத்தை எப்பொழுதும் அமைதியும் சாந்தமும் ஆனந்தமும் அடைய உதவும் சின்முத்திரை,

நம் உடம்பில் உள்ள கட்டிகளை அகற்றும் காஷ்யப முத்திரை,

அலைகின்ற மனதை வசப்படுத்தும் மான் முத்திரை,

நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்  ஹாகினி  முத்திரை,

இவ்வாறு நூற்றுக்கணக்கான முத்திரைகள் விரல்களில் உள்ளன நமக்கு எது தேவை என்பதை அறிந்து கற்றுக் கொள்வோம். பல  கேள்விகளுக்கு விடை தெரியாத ஒன்றை தியானத்தின் மூலம் விடை பெற முடியும் ஆதலால் தான் பல ரிஷிகள் தவசித்தி பெற்றவர்கள் அனைவரும் சும்மா இருப்பதே சுகம் என்று கூறினார்கள், சும்மா இருப்பது என்பது உடலை மட்டுமல்ல மனதையும் சேர்த்து தான் நம் மனதை அதன் போக்கில் அலைய விடாமல் உடலை ஆடாமல் அசையாமல் நிறுத்தி  தியானம் செய்வது முறையானது ஆகும், நாம் மௌனமாக இருப்பதற்கு நம் மனம் தான் தீர்மானிக்க வேண்டும் அப்பொழுதுதான் தியானம் சாத்தியமாகும் ஆனால் நவநாகரீகம் என்ற போர்வையில் தள்ளப்பட்டு நம் வாழ்க்கை முறையே மாற்றி, அமைத்து விட்டோம், இவை எல்லாம் பின்பற்றாவிட்டாலும் தினமும் 10 நிமிடம் சுவாசப் பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால்  தியானம் என்பது இயல்பாகவே நடைபெறும். காலையில் எழுந்து பல் துலக்குவது முதல் குளிப்பது, சாப்பிடுவது, பிறரிடம் பேசுவது, வேலை செய்வது எல்லாம் விழிப்புணர்வுட ன்   நடைபெற்று நம்மையும் அறியாமல் தியான நிலைக்கு கொண்டு செல்லும். இறுதியாக மலர் போல மலர்கின்ற மனமும் பலர் போற்றி பாராட்டும் குணமும் வேண்டுமென்று இறைவனிடம் வேண்டுங்கள். அந்த எண்ணங்களும் வார்த்தைகளுமே உங்களை தியான நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதையும் தியானம் செய்யுங்கள் உங்களில் மலருங்கள் என்று உங்களை வாழ்க வளமுடன் என்று வாழ்த்தியும் வாய்ப்புக்கு நன்றி கூறியும் விடைபெறுகின்றேன் நன்றி நமஸ்காரம்.

J Sakthimai

Senior School Yoga Teacher

Mahatma K. K. Nagar School

[post-views]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *