ஆசிரியர்

அன்னைத் தமிழை அமுதாக்கி
அந்நிய மொழியை எளிதாக்கி
கணிதப் பாடத்தைக் கற்கண்டாக்கி
அறிவியல் கற்பிக்கும் ஆராய்ச்சியாளராய்;
வரலாறு படைக்கும் சரித்திர நாயகராய்;
மாணவர் உயர்வில் மகிழ்ச்சி காண்பவர்.
கேள்விக்குறியாய் இருப்பவரை ஆச்சரியக்குறியாய் மாற்றும் அற்புதக்கடவுள்.
கரும்பலகையில் எழுதி
பெயர்ப்பலகையில்உயர வைக்கும் உத்தமர்.
பெறாத பிள்ளைகளை நெஞ்சில் சுமந்து
ஒழுக்கத்தை ஓதுவதில் உறுதியானவர்.
குழந்தைகளின் முன்னேற்றமே இவரது இலட்சியம்.
நாளும் படித்து ஞானம் வளர்க்கும் ஞான விளக்கு.
அன்புடன் அறிவை அள்ளித் தருவதில் கற்பக விருட்சம்.
மொத்தத்தில்,
ஈடுஇணை இல்லா இமயம் என்றால் ஐயமில்லை
அவர்தான் ஆசிரியர்!

Sai Lakshmi

Tamil Coordinator

Mahatma Baba CBSE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *